மதுரையைச் சார்ந்த சித்திக் என்பவர், சினிமா துறையில் துணை நடிகராகவும், நிஜ வாழ்வில் முதியோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் “நிஷா ஃபவுண்டேஷன்” என்ற பெயரில் பல சமூக
சேவைகள் செய்து வருகிறார். மேலும் அவருடைய சமூக சேவையை பாராட்டி பல நல்லெண்ண விருதுகளும் பெற்றுள்ளார். தற்சமயம் அவர் தொழில் நிமித்தமாக கீழக்கரையில் தங்கியிருந்தாலும், அங்கும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்டு தொண்டுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேவைகள் செய்து வருகிறார். மேலும் அவருடைய சமூக சேவையை பாராட்டி பல நல்லெண்ண விருதுகளும் பெற்றுள்ளார். தற்சமயம் அவர் தொழில் நிமித்தமாக கீழக்கரையில் தங்கியிருந்தாலும், அங்கும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்டு தொண்டுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.ரமலான் மாதத்தையொட்டி நிஷா பவுண்டேசன் நடத்திய ரமலான் தெரு விழா யாகப்பா நகரில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் மழை இருந்தும் அனைத்து பெண்களும் 5மணி முதல் 9மணி வரை நிஷா பவுண்டேசன் சேவைக்கு கண்ணியபடுத்தும் விதமாக அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமை தாங்கி, பல சாதனையாளர்களுக்கு பாராட்டி விருதுகள் வழங்கி பாராட்டினார். அதை தொடர்ந்து “ இஸ்லாமும் சமூக சேவையும்” என்ற தலைப்பில் ஆல் இந்தியா இமாம் கவுண்சில் மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் ஐப்பார் காஷுபி சிறப்புறை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் ரூபி நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில் நிஷா பவுண்டேசன் சேர்மன் ஜெ .சித்திக் கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சேவைகளை விளக்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print

















