மேட்டுப்பாளையம் ஹோலி ஏஞ்சல்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவன் தனது தாய், தந்தை கொடுக்கும் பாக்கெட் மணியில் ஒரு பைசாவையும் செலவு செய்யாமல் உண்டியலில் சேர்த்து வைத்து
வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவிக்கு பணத்தை கொடுத்து அப்பகுதியில் நெகிழ்வை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், வீடுகள், உடமைகளை, இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மற்றும் நடிகர், நடிகைகள் பொருட்களாகவும், பணமாகவும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு,
மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை நேரடியாகக் கொண்டு சேர்க்க நிவாரண பொருட்கள் மற்றும் நிதிகளை பெற்று வருகிறார்கள்
இன்று மேட்டுப்பாளையம் ஹோலி ஏஞ்சல்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு நமது குழுவினரிடம் வழங்குவதற்காக நிர்வாகத்தினர் இன்று அழைத்திருந்தனர்
அங்கு நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக சென்ற நமது குழு தோழர்களிடம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் தியாஸ் சந்திரன் என்ற மாணவன் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தனது உண்டியலை உடைத்து அதில் உள்ள தொகையை நமது குழுவினரிடம் வழங்கினார், இந்நிகழ்வு பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது . பொதுவாக துள்ளி குதித்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் கையில் பணத்தைக் கொடுத்தால் பத்து நிமிடத்தில் ஐஸ் கிரீம், குர்குரே, லாலிபப் என்று நாம் இதுவரை கேள்விப்படாத திண்பண்டங்களை வாங்கி செலவழித்து விடுவார்கள். ஆனால், அப்பா, அம்மா கொடுக்குற பணத்தில் தனக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் உண்டியலில் சேர்த்து வைத்து, அத்தனை பணத்தையும் சமூக சேவைக்காக மனமார கொடுத்து உதவிய ஒன்றாம் வகுப்பு மாணவன் தியாஸ் சந்திரனை பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள் வளரட்டும் இந்த மண்ணில் இளம் தலைமுறைகளின் மனித நேயத்தை நாமும் வாழ்த்துவோம்
You must be logged in to post a comment.