நீலகிரி மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக சில கிராமங்களை புதிதாக உருவாக்கி, சில ஊராட்சிகளின் எல்லையை மறுவரையறை செய்து அரசு உத்தரவு..
தமிழக அரசு கிராமப்புற நிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை எளிதாக்கவும், நிர்வாக வசதிக்காக சில கிராமங்களை புதிதாக உருவாக்கி, சில ஊராட்சிகளின் எல்லையை மறுவரையறை செய்து வருகிறது. இதனால் குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உதவுகிறது. கிராம ஊராட்சிகளை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக திகழ்வது நிர்வாகத் திறன் மேம்பாடு பெரிய கிராமங்களை நிர்வாக வசதிக்காக பிரிப்பது, மக்களின் தேவைகளை விரைவாகவும் திறமையாகவும் நிவர்த்தி செய்ய உதவும். அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்குகள் போன்றவற்றின் மேம்பாட்டை திட்டமிட்டு செயல்படுத்துவது எளிதாகும் வகையில் நிதியை திறம்பட பயன்படுத்துதல்: அரசின் நிதி உதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள ஊராட்சிகளுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கவும், திறம்பட பயன்படுத்தவும் இது உதவும். புதிய ஊராட்சிகளை உருவாக்குவதன் மூலம், கிராம மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்பை உடனடியாக அறிந்து கொண்டு மேம்படுத்தி,பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடனே தீர்க்க முடியும் இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை தீர்ப்பு மேலும் பல ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.