நீலகிரி மாவட்ட ஆட்சியர் இ.பாஸ் ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடி பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர்லட்சுமி பவ்யா தண்ணீரு இ.பாஸ் ஆய்வு மேற்கொண்ட போது நெகிழி ஒழிப்பு ஆய்வு செய்தார் வாகன சோதனையின் போது நெகிழி தண்ணீர் கேன்கள், குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது

 நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 97 குடி தண்ணீர் மின் இயங்கி இயந்திரங்கள் அமைத்துள்ளோம்

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிதண்ணீர் நெகிழி கலன்கள் மற்றும் குளிர்பான நெகிழி கலன்கள் கொண்டுவர வேண்டாம் மீறுபவர்கள் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறினார்

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சாலை மார்க்கமாக நீலகிரி செல்லும் அனைத்து வாகனங்களும் , மேட்டுப்பாளையம் ஓடந்துறை வனத்துறை சோதனை சாவடி சாலை மார்க்கமாக கோத்தகிரி செல்லும் அனைத்து வாகனங்களும் நெகிழி மற்றும் இ-பாஸ், சோதனைக்கு பின்னர் அனுப்பப்படுகிறது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!