நிலவேம்பு கசாயம் காய்ச்சி தர நாங்கள் ரெடி.பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தயாராக உள்ளவர்கள் அனுகலாம்..

மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் தலைவர் தமீமுத்தீன், சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் பொருளாளருமான வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹீசைன், கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை தர்ம அறக்கட்டளை  நிர்வாகிகள் கூட்டாக விடுத்த செய்தியில் கூறி இருப்பதாவது,

தற்போது தமிழகமெங்கும் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இது போல் கீழக்கரை பகுதிகளில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கீழக்கரை நகராட்சி, மாவட்ட சுகாதார துறையினர் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் நிலவேம்பு கசாயத்தை ஒவ்வொரு நாளும் காய்ச்சி வழங்கி வந்தாலும் இந்த காய்ச்சல் பலரை பாதிப்படைய செய்கின்றது.

இதை கருத்தில் கொண்டு கீழக்கரையில் செயல்படும் பல சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் அவரவர் அளவில் பொதுமக்களுக்கு தெருக்களை தேர்வு செய்து வாகனங்களில் நேரில் சென்று இலவசமாக நிலவேம்பு கசாயம் காய்ச்சி கொடுத்து வருகின்றார்கள்.

இந்த சமூக சேவையில் பலருக்கு ஆர்வம் இருந்தாலும் நிலவேம்பு கசாயம் காய்ச்சிவதில் சிரமம் இருப்பததால் கீழக்கரையில் சில சமூக ஆர்வலர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் சமுதாய இயக்கத்தினர் பொதுமக்கள் நலன் கருதி கீழ்கண்ட அலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு மிகவும் தரமான முறையில் நிலவேம்பு கசாயம் காய்ச்சி காலையிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூட்டாக தெரிவித்து இருக்கின்றார்கள்.

நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யும் சமூக ஆர்வலர்கள் முன் கூட்டியே கீழ்க்கண்ட அலைபேசியில் எண்களில் தொடர்பு கொள்ளவும். 9443358305 9677640305 9791742074 9597048766

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!