நிலக்கோட்டையில் மருந்து கடைக்காரர்களுடன் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 10 ற்க்கும் மேற்பட்ட மெடிக்கல் ஷாப் உள்ளது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டத்தின் மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர், இவர்களுடன் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சங்கரேஷ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் ஆய்வாளர் சங்கரேஷ்வரன் பேசும் போது கூறியதாவது, கடை உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் மற்றும் கை உறை அணிய வேண்டும், சில மருந்துகளை சிலர் தவறாக போதை தரக்கூடிய வகையில் பயண்படுத்தி ஆங்காங்கே மரணங்கள் நிகழ்கின்றன என்பதை கவனத்தில் கொண்டு மருந்துகளை வழங்க வேண்டும், மருத்துவர்களின் மருந்து சீட்டு இன்றி மருந்துகளை வழங்க கூடாது என்றும், ஒரே நபர் திரும்ப திரும்ப ஒரு மருந்து வாங்குவதை கண்காணிக்க வேண்டும் எனவும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.இந்நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் கண்ணா காந்தி உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









