நிலக்கோட்டையில் மாபெரும் மருத்துவ பரிசோதனை முகாம், மற்றும் சமூக சேவைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.!

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் விக்டரி அறக்கட்டளை மற்றும் மூன்றாம் கை அறக்கட்டளை சார்பாக திண்டுக்கல் கே. டி. மருத்துவமனை இந்தியன் வங்கி போஸ் இரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் எலும்பு மூட்டு பொது மருத்துவ முகாம் ரத்த முகாம் இலவச ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மூன்றாம் கை அறக்கட்டளையின் நிறுவனர் அன்வர் தலைமை தாங்கினார்.

காதர்மைதீன் மூன்றாம் கை அறக்கட்டளையின் இயக்குனர் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் பல்வேறு சமூக ஆர்வலர்கள்,மூத்த இரத்த கொடையாளர்களுக்கு, சமூக சேவைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ். பாலகுமார் மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் ல.யூஜின் ஆகியோர் வழங்கினர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. யூஜின் நிலக்கோட்டை வட்டாட்சியர், த. ரங்கராஜ் சினிமா இயக்குனர், ரபீக் அஹமது ஆசிரியர் வதிலை எக்ஸ்பிரஸ், குணச்சித்திர நடிகர் தவசி, குஜிலியம்பாறை வட்டாட்சியர் தனுஷ்கோடி, நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, ராஜ்குமார் மாவட்ட கவுன்சிலர், ஜோசப் கோவில் பிள்ளை, மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை வட்டாட்சியரின் சிறப்பான செயல்பாடுகளை அறிந்து, மூன்றாம் கை அறக்கட்டளையின் சார்பாக, தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அஸ்கர் அவர்கள் வட்டாட்சியர் யூஜின் அவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்,

இந்த முகாமில் நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து செயல்பட்ட முகமது மீரா (நிர்வாக இயக்குநர் விக்டரி அறக்கட்டளை) அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!