இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை..

இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை..

தகுதியற்றதாக சான்றளிக்கப்பட்ட பழுதடைந்து இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்டார வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது,கூட்டத்திற்கு பொறுப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார்,பொறுப்பாளர் செல்வநாதன் வரவேற்றார்,கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் சிவபிரகாஷ்,செயலாளராக இளங்கோவன், இணைச்செயலாளராக கணேசன், பொருளாலராக செல்வநாதன்,துணைத்தலைவராக கோபாலகிருஷ்ணன்,துணைப்பொருளராக தமிழ்ச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர்கள்,சுமார் 30-ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் மேல் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் விசாரணைக்கா வந்த பொதுமக்கள் மீது விழுந்து ஒருவர் படுகாயடைந்தார் அதனை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவுப்படி கட்டிடத்தை ஆய்வு செய்த பொறியாளர் குழுவினர் அந்த கட்டிடம் வசிப்பதற்கு, பயன்படுத்துவதற்கு தகுதியற்றது என சான்று வழங்கியுள்ளதாக கூறியுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் அதே கட்டிடத்தில் நீதிமன்ற பணிகளை செய்து வருகின்றன, இதனால் மிகுந்த அச்சத்தோடு பணிபுரிந்து வருகின்றோம். தகுதியற்றதாக சான்றளிக்கப்பட்ட பழுதடைந்து இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும்,நிலக்கோட்டையில் பழுதடைந்த சிவில் நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும்,அதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற வழிகாட்டுதழ்படி புதிய நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானமாக நிறைவேற்றி கோரிக்கை வைத்துள்ளனர்,அதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்ற பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைப்பதாக கூறினர்.



Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!