டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய கடலை மிட்டாயில் புழுக்களா.? கடையின் புகழுக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக உரிமையாளர் பரபரப்பு புகார்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் வசந்தம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்டோர் ஆகும், இங்கே கிடைக்கும் பொருட்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும் என கடையின் வாடிக்கையாளர்கள் கூறுவது உண்டு.
இந்நிலையில் கடந்த 19/03/204 அன்று இரவு 8 மணியளவில் மன்னவராதியை சேர்ந்த சந்தன பிரபு என்பவர் அவருடைய கடையின் அடையாள எண் (7121) முட்டை மற்றும் லாக்டோஜென் ஆகிய இரண்டு பொருட்களை மட்டுமே வாங்கியுள்ளார்.
வாங்கிய பொருட்களின் ரசீதை காண்பித்து கடலை மிட்டாய் வாங்கியதாகவும் அதில் புழுக்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது சம்பந்தமாக நிலக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா இடத்தில்புகாரும் சென்றுள்ளது.
அதன் பின்னர் சரண்யா சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு தனது உதவியாளரை அனுப்பி ஆய்வு செய்ய கூறியுள்ளார்.
ஆய்வின் போது அங்கே இருந்த மிட்டாய்கள் நல்லவிதமாகவே இருந்துள்ளது.
சில பாக்கெட்களை ஆய்வுக்காக தனது அலுவலகத்திற்கு எடுத்தும் சென்றுள்ளார்.
இந்நிலையில் நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா இடத்தில் பேசினோம் அப்போது அவர் கூறியதாவது;
பெரும்பாலும் கடலை மிட்டாய்களில் புழுக்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவுதான் தூசிகள் அல்லது மாவு கலந்து இருக்கும் பட்சத்தில் அது மட்டும் தான் தென்படும் ஆனால் புழுக்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறினார் மேலும் மேற்கண்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள கடலை மிட்டாய்கள் தரமாக இருப்பதாகவும் அந்த மாவு போன்ற பொருட்கள் கூட இல்லை என கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நிலக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக வசந்தம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் கலந்தர் நைனா முகமது இடத்தில் பேசினோம் அப்போது அவர் கூறியதாவது;
கடந்த ஐந்து வருடங்களாக நிலக்கோட்டையில் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறோம் ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில், முடிந்து போன தேதியில் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்வதற்காகவே ஒருவரை வேலைக்கு அமர்த்தி உள்ளோம். எங்கள் ஸ்டோரில் மிகவும் தரம் வாய்ந்த நல்ல பொருட்களை மட்டுமே வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம் அப்படி இருக்கும் சூழ்நிலையில் மன்னவராதியைச் சேர்ந்த எங்களது வாடிக்கையாளர் சந்தன பிரபு என்பவர் எங்கள் கடையில் கடலை மிட்டாய் வாங்கியதாகவும் அதில் புழுக்கள் இருந்ததாகவும் எங்கள் ஸ்டோரின் ரசீதை காண்பித்து ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அவர் காண்பித்து செய்திகள் வெளியான ரசீதில் முட்டை மற்றும் லாக்டோஜென் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது, கடலைமிட்டாய் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் வேண்டுமென்றே எங்களது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் எனும் நோக்கத்திலும் வேறு சில காரணங்களாலும் இது போன்ற அவதூறுகளை பரப்பியுள்ளனர். இது எங்களுக்கு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
எங்கள் கடையில் வாங்காத ஒரு பொருளை வாங்கியதாகவும் அதில் புழுக்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டிய நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









