நிலக்கோட்டை பகுதிகளில் குப்பை மேடுகளில் அடிக்கடி பற்றி எரியும் “தீ” குப்பைகளை கொட்டவும், அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

நிலக்கோட்டை பகுதிகளில் குப்பை மேடுகளில் அடிக்கடி பற்றி எரியும் “தீ” குப்பைகளை கொட்டவும், அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில், நிலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குற்றவழக்குகளில் பிடிக்கப்பட்ட கார்,வேன்,இருசக்கர வாகனங்கள் மாட்டுவண்டி என ஏராளமான வாகனங்கள் வத்தலக்குண்டு மதுரை சாலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியின் பின்புறம் இப்பகுதி குடியிருப்பு மக்கள் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று (28/04/2024) மாலை 5-மணி அளவில் திடீரென வாகனங்கள் நிறுத்திய பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியதால் எதிரில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் தகவல் அறிந்து உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் நிலக்கோட்டை காவல் துறையினரே ஈடுபட்டனர் தனியார் தண்ணீர் வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,ஆனாலும் ஒரு சில வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின.

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல்வேறு வாகனங்கள் தீயில் எரிந்தது.

திடீர் தீ குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானலுக்கு நாளை தமிழக முதல்வர் வருகையையொட்டி நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினர் கொடைக்கானல் சென்றுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

நிலக்கோட்டை பகுதிகளில் குப்பைகள் கொட்டும் இடங்களில் அடிக்கடி தீ பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.

ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை கொட்டுவதற்கும் அதை அகற்றுவதற்கும் முறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!