நிலக்கோட்டை அருகே, கூலித்தொழிலாளி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை.! உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி சார்பில், திடீர் சாலை மறியலால். பதட்டம், பரபரப்பு, போலீஸ் குவிப்பு..
நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டில் வாசல் முன்பாக படுத்து உறங்கிய வரை வெட்டி படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி பட்டியலினத்தைச் சேர்ந்த நடுபட்டி கிராம மக்கள் நிலக்கோட்டை பிரதான சாலையில் மறியல் .. பதட்டம் பரபரப்பு போலீஸ் குவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் இன்று அதிகாலை வீட்டின் முன்பாக படுத்து உறங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஆண்டான் வயது 55 என்பவரை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது இதன் எதிரொலியாக பட்டியலினத்தைச் சேர்ந்த நடுப்பட்டி கிராம மக்கள் சார்பில் நிலக்கோட்டை நால் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தெய்வம் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி மற்றும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிலக்கோட்டை பகுதி முழுவதும் பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது. கூலித்தொழிலாளி ஆண்டான் என்பவரை படுகொலை செய்த மர்ம கும்பலை கைது செய்ய வேண்டும் எனவும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாக நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் மதுரை வத்தலகுண்டு கொடைக்கானல் தேனி பெரியகுளம் திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. உசிலம்பட்டி சோழவந்தான் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டது நிலக்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.