நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரேதத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம்!-விசிக மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல்;கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டின் முன்பு படுத்து உறங்கிய கூலி தொழிலாளியை மர்ம கும்ப கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நடுப்பட்டி பொது மக்கள் நிலக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இன்று இரண்டாவது நாளாக கொலை செய்யப்பட்ட ஆண்டான் என்பவரது பிரேதத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நடுப்பட்டி, கரியாம்பட்டி பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் பாவரசு, மாநில துணைச் செயலாளர் கனிஅமுதன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நடுப்பட்டி கிராமத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட ஆண்டானின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் மனுவும் கொடுத்துள்ளனர்.
அதில் கூலி தொழிலாளி ஆண்டான் என்பவரை படுகொலை செய்த மர்மக் கும்பலை சேர்ந்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ஆண்டான் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் மேலும் கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் ஆண்டான் பிரேதத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அவர்களிடம் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









