நிலக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் அண்ணன், தம்பி, இருவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

நிலக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் அண்ணன், தம்பி, இருவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மகன்கள் ராஜ் வயது 46, காசிராஜன் வயது 42. இருவரும் அண்ணன் தம்பிகள். 2 பேரும் அழகாபுரியில் விவசாயம் செய்து பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த பூக்களை நிலக்கோட்டை பூ சந்தையில் பூக்களை விற்பதற்காக காலையில் தனது டிவிஎஸ் 50 இரு சக்கர வாகனத்தில் அழகாபுரியில் இருந்து வத்தலகுண்டு நிலக்கோட்டை பிரதான சாலையில் இரண்டு பேரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மீதும் நேருக்கு நேர் பலமாக மோதியது. இதில் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு இரண்டு பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ராஜுக்கு மனைவி காமாக்காள், மகள்கள் மல்லிகா ,ரோஷினி ஆகியோர் உள்ளார்கள். அதேபோன்று காசிராஜனுக்கு மனைவி சந்திரா மகள்கள் துர்கா, மகன் மகி பாலா ஆகியோர்கள் உள்ளார்கள் பூவிற்க வந்த விவசாயிகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!