நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கோர விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே பொட்டிசெட்டி பட்டியைச் சேர்ந்த பாலகுரு என்பவர் வத்தலக்குண்டு சோழ மண்டலம் ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை முடித்து கொடைரோடு நோக்கி தமது இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அது சமயம் சிலுக்குவார்பட்டி அருகே எதிர்பாராத விதமாக நடந்து சென்றவர் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாலகுரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நடந்து சென்றுவரும் காயமடைந்த நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான நபரின் உடலை போலீசார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பந்தமாக நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









