நிலக்கோட்டை புதுத் தெரு பகுதிகளில் அரைகுறையாக சப்ளை ஆகும் மின்சாரம்! அச்சத்தில் பொதுமக்கள்; விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை புதுத் தெரு பெண்கள் விடுதி முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.
இந்நிலையில் புது ட்ரான்ஸ்ஃபார்மர் வைக்காமல் தற்காலிகமாக அந்த பகுதிகளில் வேறு இடத்திலிருந்து நேரிடையாக மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.
அன்றிலிருந்து அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் விட்டு விட்டு வருவதும், விளக்குகள் அனைத்தும் விட்டுவிட்டு எரிவதுமாக உள்ளது. மின்சாரம் குறைவான அளவில் வருவதால் தண்ணீர் மோட்டார்,ஏசி, வாசிங் மெசின், ப்ரிட்ஜ் உட்பட எதுவும் சரிவர இயங்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், வீட்டில் இருக்கும் மின்சார பொருட்கள் பழுதடைந்து விடுமோ, அல்லது வெடித்து வேறு ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.
உரிய தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை துண்டிக்கும் மின்சார வாரியம்; சரியான முறையில், சரியான நேரத்தில், மின்சாரம் வழங்க கூடாதா என அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆகவே விரைந்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து அப்பகுதி பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.