நிலக்கோட்டை காவலர் குடியிருப்பை “காவு” வாங்கும் கயவர்கள்! அச்சத்தில் பொதுமக்கள்! அசந்து தூங்கும் நிர்வாகம்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பாழடைந்தும் சமூக விரோதிகளுக்கு புகழிடமாகவும் திகழ்கிறது.
மக்கள் குடியிருப்புகள் மற்றும் பிரபலமான பள்ளி மற்றும் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் நடமாடும் பகுதிக்கு மத்தியில் இந்த பாழாப்போன கட்டிடங்கள் இருப்பது தான் பிரச்சனையே.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மர்ம நபர்கள் சிலர் போதையில் பட்டப்பகலில் இந்த கட்டிடங்களின் ஜன்னல் கம்பிகளை உடைத்து எடுத்து செல்கின்றனர்.
அந்த மர்ம நபர்கள் கம்பிகளை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பெண்கள் பயந்து தங்களின் வீட்டு கதவுகளை மூடிக்கொண்டதாக அச்சத்துடன் அப்பகுதி பெண்கள் கூறுகின்றனர்.
இந்த பாழடைந்த பாழாப்போன கட்டிடங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களையும் அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி குழந்தைகள், எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை பல முறை நாம் செய்திகளாக வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயன்படாத கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கி இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இனியும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள்.
அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு” “அசந்து” தூங்கும் நிர்வாகம் விழிக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.
You must be logged in to post a comment.