நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக களை கட்டும் ஜமாபந்தி!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வருவாய் தீர்வாய் அலுவலரும் திண்டுக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையில் நேற்று முன்தினம் துவங்கியது.
நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான விசாரணை வருவாய் தீர்வாய் அலுவலர் பால்பாண்டி விசாரணை செய்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் மாலைய கவுண்டன்பட்டி, குள்ளல குண்டு, கல்லடி பட்டி, இராமராஜபுரம், மட்டப்பாறை, ஜம்புதுரைகோட்டை, ஒருத்தட்டு, பள்ளப்பட்டி, ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா பிரச்சனை நிலம் தொடர்பான பிரச்சனை பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டது.வருவாய் அதிகாரிகள் மீனாட்சி பாலகுருநாதன் கிராம நிர்வாக அலுவலர்கள் கனி, ஜெயலட்சுமி,சத்தியா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
You must be logged in to post a comment.