நிலக்கோட்டையில் கேரளாவைச் சேர்ந்த, பூ ஏற்றுமதியாளர் வீட்டில் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மெகாசிட்டியில் வசித்து வருபவர் முகமது அலி (52), கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக நிலக்கோட்டையில் வசித்து வருகிறார். இவர், நிலக்கோட்டையில் இருந்து பூக்களை விலைக்கு வாங்கி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இவர், வசிக்கும் நிலக்கோட்டை வீட்டில் கேரளா பதிவு எண் கொண்ட 4-கார்களில் வந்த கேரளாவைச் சேர்ந்த 10-ம் மேற்பட்ட வருமான வரித்துறையினர், அவரது வீடு மற்றும் ஏற்றுமது நிறுவனத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பூ ஏற்றுமதியாளர் முகமது அலிக்கு கேரளாவில் பல்வேறு பூ ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளதால், அங்கு வருமான வரி செலுத்தாததால், இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சோதனையில், நிலக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் கேரளாவை சேர்ந்த வருமான வரி துறையினர் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
நிலக்கோட்டையில் வீடு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்த பணியாளர்கள் மற்றும் அங்கு இருந்த ஆவணங்கள் ஆய்வு செய்தனர். மாலை வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கிளம்பிச் சென்றனர்.
நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கி ஏற்றுமதி செய்து வரும் கேரளாவில் சேர்ந்தவரது வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

