நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்..

நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்..

நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை நிலக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது வளைவு ஒன்று வந்துள்ளது அது சமயம் ஸ்டேரிங்க்கை ஓட்டுநர் திருப்பி உள்ளார்.

திடீரென ஸ்டேரிங்க் உடைந்து பேருந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்து ரைஸ் மில் ஒன்றில் மோதியது.

ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு பிரேக் பிடித்துள்ளார்.

இல்லை என்றால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும் என நடுக்கத்துடன் பயணி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளும் சாலை ஓரத்தில் நடமாடிய மக்களும் உயிர் பிழைத்தனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு பேருந்துகளை சரியாக பராமரித்து உரிய முறையில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!