நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் அவசர கூட்டம்! மூன்று தினங்கள் கோர்ட் புறக்கணிப்பதாக அறிவிப்பு..

நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் அவசர கூட்டம்! மூன்று தினங்கள் கோர்ட் புறக்கணிப்பதாக அறிவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் செயலாளர் கோகுல்நாத் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டன.

மேலும் கீழ்கண்டவாறு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

விசாரணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் பாஸ்வர்டு கொடுப்பதிலும், நடைமுறை படுத்துவதிலும் ஊழியர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் வழக்கு தேங்கும் நிலை நிலவி வருகிறது.மேலும் அசல் தாவா வழக்குகளில் ஆவணங்களையும் , மனுக்களையும் அப்லோட் செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.

இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்தும் ,ரிடர்ன் குறித்த தகவலோ,ரீ சப்மிட் செய்வது குறித்தோ ஊழியர்களுக்கு அனுபவமோ,புரிதலும் இல்லாததால் வழக்கறிஞர்கள் ஊழியர்களிடையே பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது, பல வழக்குகள் உரிய நேரத்தில் நெம்பர் ஆகாமல் உள்ளது.

ஏற்கனவே வழக்கறிஞர்கள் வைத்திருக்கும் கோர்ட் பீஸ் ஸ்டாம்ப்களை வழக்குகளில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

விசாரணை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சமர்பிக்கும் 126, 311 , 317 CrPc மனுக்கள் மற்றும் காப்பி அப்ளிகேஷன் மனுக்கள் மற்றும் வக்காலத்து நாமாக்கள்,சம்மன் சார்பு மனுக்கள்,பேட்டா மெம்மோக்கள் போன்ற உடனடி மனுக்களை நீதிமன்றத்தில் நேரடியாக சமர்பிக்க அனுமதிக்க வேண்டும், இ பயிலிங் முறையில் இருந்து இதற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் இ பயிலிங் முறை கொண்டு வர அனைத்து உபகரணங்களுடன் கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சி பெற்ற ஊழியர்களை கொண்டு இ- பையிலிங் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதுவரை கட்டாய இ-பைலிங் முறையை மாண்புமிகு உயர்நீதிமன்றம் நிறுத்திவைக்க வலியுறுத்தி நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!