வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்.
நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, திங்கள்கிழமை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வட்டார வழகறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், நிதி ஒதுக்கியும் தாமதமாகும் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கி செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசை வழியுறுத்தியும்,
சமீப காலமாக வழக்கறிஞர் தாக்கப்பட்டு வருவதை தடுக்கும் வகையில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
