வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம். 

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்.
நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர்,  வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிராத போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டையில் வட்டார வழகறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, உண்ணாவிரத போராட்டத்திற்கு  வழக்கறிஞர் சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
உணாவிரதத்தில்,  நிலக்கோட்டை தாலுகாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், நிதி ஒதுக்கியும் தாமதமாகும் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கி செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசை வழியுறுத்தியும்,
சமீப காலமாக வழக்கறிஞர் தாக்கப்பட்டு வருவதை தடுக்கும் வகையில்,  வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பி உண்ணாவிரகத்தில் ஈடுபட்டனர். இதில், வழக்கறிஞர்கள்  சங்க உதவி  தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவி  பொருளாளர் தமிழ்ச்செல்வி, வழக்கறிஞர் திருலோக சந்திரபோஸ் உள்ளிட்ட 50-க்கும்  மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!