முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்! வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் பரபரப்பு..

நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில்  தமிழக முதல்வர் கொடைக்கானல் வருவதை ஒட்டி அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு பரபரப்பான போஸ்ட்ர் நிலக்கோட்டை தாலுகா பகுதியில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக ஒட்டப்பட்டுள்ளது.

போஸ்டரில் எழுதியுள்ள வாசகங்கள், தமிழக அரசே! தமிழக அரசே! தூண்டாதே! தூண்டாதே! கள்ளரின மக்களை போராடத் தூண்டாதே! எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படும் கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் அதிகாரத் தோரனையில் கள்ளர் கல்விக் கழகம் மற்றும் கள்ளர் காமன்பண்டு நிலங்களை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கு கையகப்படுத்திடும் மற்றும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கலவித்துறையோடு இணைக்கும் ஏகாதிபத்திய முடிவையும் உடனடியாக கைவிடு! வெளியிடு! வெளியிடு! மறுப்பு அறிக்கை உடனே வெளியிடு! இதற்கான 2023 ம் ஆண்டு நடைபெற்ற தொடர் போராட்டங்கள் மறக்கப்பட்டதா?! மறுக்கப்படுக்கிறதா?! சீண்டாதே! சீண்டாதே! ஒட்டுமொத்த கள்ளரின மக்களின் உணர்வுகளை சீண்டாதே!. என்ற வாசகங்களுடன் கொடைக்கானல் செல்லும் நெடுஞ்சாலையோரங்களில் தமிழக முதல்வர் வருகை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!