நிலக்கோட்டை – அணை பட்டியில் போலீசை கண்டித்து சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி , அணைப்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாகம் அலுவலகம் உள்ளது.                               இந்த அலுவலகம் முன்பு நேற்று அணைப்பட்டி காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டி முருகன் இவர் தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைத்துள்ளார்   காதணி விழாவுக்காக மைக் செட் போடப்பட்டுள்ளது. அப்போது அதிக சத்தமாக பாடியதாகக் கூறப்படுகிறது  இதனை அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்     ஆகியோர்கள் சென்று காதணி விழா  30.6.2019     இன்று நடைபெறுவதால் சத்தத்தை குறைத்து மைக் செட் போடும் படி கூறியுள்ளார்கள்.       இதனை விழா குழுவினர் களும் மைக் செட் போடும் நபர்கள் மறுத்ததால் உடனடியாக விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாருக்கு தகவல் கொடுத்தனர்.    உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் மைக் செட் ஒலிப்பெருக்கியில் உள்ள யூனிட்டை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது..           இதனால் ஆத்திரமடையும் விழாக் குழுவினர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நின்றிருந்த டயர்வண்டியை மறித்து நிலக்கோட்டை ..அணைப்பட்டி சாலையில்  போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்   .

   உடனே போலீசார் டயர் வண்டி அப்புறப்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தனர். பின்னர் சம்பவத்திற்கு காரணமான மைக் செட் அமைப்பாளர் தினேசை. கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்ட்ரேட் மும்தாஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்   .        இதனைத் தொடர்ந்து 15 நாள் சிறை காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இச்சம்பவம் இப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!