நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தை ஆகிய வசூல் ஆயம் மூன்றாவது முறையாக பொது ஏலம் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நிலக்கோட்டை செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தினசரி வாரச்சந்தை முதலில் ஏலத்திற்கு வந்தது அதனை நிலக்கோட்டை சேர்ந்த மணிராஜ் என்பவர் 22 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது.முத்திரையிட்ட டெண்டரில் திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் 46 லட்சத்து 13 ஆயிரத்து டெண்டரில் கேட்டிருந்தார்.இந்த தொகையை அதிக தொகை கருதி ஏலம் விடப்பட்டது.


You must be logged in to post a comment.