வரும் எதிர்காலங்களில்  நீருக்காக உலக போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக இந்திய அரசின் நீர் மேலாண்மை இணைச் செயலாளர் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நீர் மேலாண்மை செயல்பாடுகள் குறித்து கல்லூரி மாணவியர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா தலைமையில் நடைபெற்றது..         கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி வரவேற்று பேசினார்.   இந்திய அரசின் டெல்லி நீர் மேலாண்மை இணைச் செயலாளரும் ,அணு ஆற்றல் துறை அதிகாரியுமான டாக்டர் எஸ். மெர்வின் அலெக்சாண்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு   மாணவிகள் முன்னிலையில் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில் வளரும் இளம் தலைமுறைகள் தினம்தோறும் வாசிப்புத்திறன், மற்றும் அன்றாட நிகழ்ச்சிகளை நாளிதழ்கள் வாயிலாக படிக்க வேண்டும்.      இன்றைக்கு மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக செய்துள்ளது. இன்றைக்கு நீர் மேலாண்மை பற்றி கூறவேண்டுமானால் உலக விஞ்ஞானம் எதை ஆராய்ச்சி செய்தாலும் அங்கு உயிர்வாழத்தேவையான வாய்ப்பு பிரதான் என ஆய்வு செய்தால் முதலில் நீர் இருக்கிறதா என ஆய்வு செய்து விட்டுத்தான் மற்றதை ஆய்வு செய்வார்கள். இதற்கு காரணம் நீர் இருந்தால் மட்டுமே உயிர்வாழ முடியும. நீர் இல்லை என்றால் உயிர் இல்லை. இன்றைக்கு ஜனத்தொகை என்னுடைய வளர்ச்சி அதிகமாக இருப்பதால் நீரின் தேவை அதிகரித்து உள்ளது. இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய நீரில் 97 சதவீதம் உப்பு நீர், மீதம் 3 சதவீத நீர் தான் நல்ல நீராக கருதினாலும் நமக்கு கிடைக்கும் நீரின் அளவு 0.014 நான் நல்ல நீர் கிடைக்கிறது. இதை வைத்துத்தான் அனைத்து நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.  எனவே நீரை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு, நீரின் அவசியமும் நிச்சயமாக இக்காலகட்டத்தில் தேவையாக உள்ளது. வரும் எதிர்காலங்களில் நீர்க்காகம் மிகப்பெரிய உலகப் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்த வண்ணம் இருக்கிறது.இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் நீரை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க மாணவ சமுதாயமும் இணைந்து மக்களிடம் முறையாக நீரின் முக்கி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கேட்டுக்கொண்டார்.    இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட செயற்பொறியாளர் ராமசாமி, மாவட்ட திட்ட பயிற்சியாளர் மதுபாலா,  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் வெற்றிவீரன், உதவி பொறியாளர்  டில்லி, கல்லூரிப் பேராசிரியர் சின்னசாமி, பாண்டீஸ்வரி லதா  உள்பட  பலர்  கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!