நிலக்கோட்டை அருகே 150 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயை காணாததால் மாவட்டகலெக்டர் அதிர்ச்சியடைந்தார். 20 நாளில் ஆக்கிரமிப்பை அகற்றஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள்குடிமராமத்து பணிகளை துவக்கி வைப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்விஜயலெட்சுமி நிலக்கோட்டை பகுதிக்கு நேற்று வந்தார். முதலாவதாககரட்டுப்பட்டி பிரிவில் உள்ள பொன்னான்குளம் கண்மாய்க்கு சென்று பூமிசெய்து குடிமராமத்து பணிகளை பொக்லைன் மூலம் துவக்கி வைத்தார். அதன் பிறகு
மட்டப்பாறை கண்மாய் குடிமராமத்து பணிகளை துவக்கி வைக்க மட்டப்பாறைசென்றார். அங்கும் பூமி பூஜை நடந்தது. அதன் பிறகு கலெக்டர் கண்மாயைபார்வையிட சென்ற போது கண்மாயை காணாமல் அதிர்ச்சியடைந்தார். கண்மாய்முழுவதும் இடவெளியின்றி முற்றிலும் கரும்பு, வாழை, வெள்ளரி, தக்காளிஉள்பட பல்வேறு விவசாயங்கள் செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் அதிகாரிகளைபார்த்து 20 தினங்களுக்குள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிகுடிமராத்து பணிகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால்அங்குபரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கலெக்டருடன் பொதுப்பணித்துறை மாவட்டசெயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியளார் சௌந்தரம், உதவி பொறியாளா்நீதிபதி, நிலக்கோட்டை தாசில்தார் நவநீதிகிருஷ்ணன் மற்றும் விவசாயி சங்கதலைவர்கள், விவசாயிகள் ஏராளமானோர் உடன் சென்றிருந்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









