நிலக்கோட்டையில் பயனில்லாமல், கேட்பாரற்று கிடக்கும் பேரூராட்சிக்கு சொந்தமான கழிப்பறை கட்டிடம்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை 14 வது வார்டு பெரிய காளியம்மன் கோவில் அருகே நிலக்கோட்டை பேரூராட்சியால் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் பல வருடங்களாக பாழடைந்து பயனற்று கிடக்கிறது.

அதன் அருகே பல குடியிருப்புகளும் முக்கிய கோவிலுக்கு செல்லும் பாதையாகவும் இருக்கிறது, இந்த குடியிருப்பின் சாலையும் பெரிய காளியம்மன் கோவில் சாலையும் இணையும் இடத்தில் தான் இந்த கழிப்பறை கட்டிடம் நந்தி போல உள்ளது, இந்த சாலைக்கு நடுவே இந்த பாழடைந்த கட்டிடம்  நந்தி போல உள்ள காரணத்தால் அப்பகு மக்கள் அந்த சாலை வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகையினால் அந்த பயனற்று கிடக்கும் கழிப்பறையை இடித்து விட்டு அந்த ரோட்டை அகலப்படுத்தி இந்த இரண்டு ரோடுகளையும் இணைத்தால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!