கீழக்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அதே போல் பல மருத்துவர்கள் இருந்தாலும் இரவு நேரங்களில் மருத்துவத்துக்கு மக்கள் அல்லாடும் நிலையே உள்ளது. அரசு மருத்துவமனை இருந்தும், நிரப்பப் பட வேண்டிய பணியிடங்களை நிரப்பவே மக்கள் சட்ட ரீதியாக போராடும் நிலையே உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ள கீழக்கரை
தொழிலதிபர் பி எஸ் எம் ஹபீபுல்லா கீழக்கரையில் எளிய மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் இரவிலும் செயல்படும் வகையில் விரைவில் துவங்கப்பட உள்ளது.
இந்த இலவச மருத்துவமனையில் பணியாற்ற நல்ல சம்பளத்துடன் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற இரண்டு (2) பொது மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தேர்வாகும் மருத்துவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கீழக்கரை பொதுமக்களுக்கும் சுற்றுபுறகிராம மக்களுக்காக துரித, அவசர மருத்துவத்தை கருத்தில் கொண்டு துவக்கப்பட உள்ளது.
பணியாற்ற ஆர்வமுள்ள மருத்துவர்கள் 0091 94431 41492 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கீழக்கரை என்றுமே அரசாங்கத்தை எதிர்பாராமல் தனியாரால் மக்களுக்கு தேவையை நிறைவேற்ற கூடியவர்கள் நிறைந்த ஊர் என்பதற்கு வள்ளல் சீதக்காதி முதல் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த BS.அப்துர்ரஹ்மான் உருவாக்கிய கல்லூரிகளும், மருத்துவமனைகளுமே முன்னோடியான சாட்சிகளாகும்.


masha allah ..congrats