கோவை காா் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் ரகுமான் வீடு உள்பட 12 இடங்களில் இன்று அதிகாலை முதல் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி காரில் இருந்த குண்டு வெடித்தது. இதில், அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த வழக்கை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகாமை) அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், இதில் தொடா்புடையதாக முகமது தெளஃபீக், உமா் ஃபாரூக், ஃபெரோஸ் கான், அஃப்சா் கான், முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், சனோஃபா் அலி, ஷேக் இதயத்துல்லா, முகமது இத்ரிஸ், மற்றொரு முகமது அசாருதீன், தாஹா நஸீா் ஆகிய 14 போ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்திவரும் தேசிய முகமை அதிகாரிகள், அவ்வப்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சனிக்கிழமை காலை கோவை அல் அமீன் காலனி பகுதியைச் சார்ந்த ரகுமான் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ரகுமான் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இவரது வீட்டில் தேசிய முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருக்கின்றனர். ரகுமான் வீடு மட்டுமின்றி, கோவை மாவட்டம் முழுவதும் 12 இடங்களில், அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









