திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பாக பாரதப் பிரதமர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் வலியுறுத்தி நிலக்கோட்டை அரசு கலைக் கல்லூரி முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி பஸ் நிலையம் வரை சுமார் 5 கிலோமீட்டர் மாணவிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் பெத்தா லட்சுமி தொடங்கி வைத்தார்.
நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் முன்னிலை வகித்தார்.நடைபயணத்தின் போது மாணவிகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மரங்களை அதிகளவு நட்டு மழைநீரைச் சேகரிக்க வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.இந்த ஊர்வலத்தில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லட்சுமி, கல்லூரி பேராசிரியர்கள் பாக்கியம், சுந்தரபாண்டி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









