18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு…..

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு…..

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2020, 9:30 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று 24.10.2020 நகர செயலாளர் பாசித் இலியாஸ் தலைமையிலும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அற்புதகுமார் மற்றும் நகர் நிர்வாகிகள் முன்னிலையிலும் கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார் மனுவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்MP மீது சமூக வலைதளங்களில் அவதூறை பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த குஷ்பு, கல்யாணராமன், காயத்ரி ரகுராம், ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இன்று (24/10/2020) விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!