18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளைஞர்களின் சேவையை பாராட்டி தானாக முன்வந்து நிதியுதவி வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்.

இளைஞர்களின் சேவையை பாராட்டி தானாக முன்வந்து நிதியுதவி வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்.

எழுதியவர்: mohan October 23, 2020, 5:50 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள 60ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கண்மாயை 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் நிதியுதவி திரட்டி கண்மாயை ஜேசிபி இயந்திரம் மூலம் இரவும் பகலும் பாராமல் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியான பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி நிர்வாகம் இளைஞர்களின் சமூக சேவையை பாராட்டி தானாக முன்வந்து நிதியுதவி செய்தனர்.இதில் கல்லூரி நிர்வாக தலைவர் மோகன் சார்பில் கல்லூரி முதல்வர் அருள்குமார் நிதியுதவி வழங்கினார். இதில் பல்தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் காசிமாயன், மேலாளர்நாகேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!