17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரும் உயிர் சேதத்தை தடுக்குமா மின்சார வாரியம்……..

பெரும் உயிர் சேதத்தை தடுக்குமா மின்சார வாரியம்……..

எழுதியவர்: ஆசிரியர் October 23, 2020, 5:39 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளுவாடி கிராமத்தில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஊரின் முக்கிய வழிப்பாட்டுத் தலமான பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் (மின் மாற்றி) டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை சரி செய்யாவிட்டால். பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்று ஊர் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.

இதைப்பற்றி கீழக்கரை மின்சார வாரியத்தில் பலமுறை தகவல் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இந்த மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!