17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

எழுதியவர்: mohan October 23, 2020, 10:45 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்திய வட்ட வழங்கல் அதிகாரி குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தபோது லாரியில் இருந்து ஓட்டுனர் தப்பி ஓடியுள்ளார் பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 15 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருப்பதை உறுதி செய்த பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர் தொடர்பு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் அரிசி கடத்தல் தொடர்கதையாகி வருகிறது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!