தென்காசி மாவட்டம் சுரண்டையில் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் கொரானா ஒழிப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கொரானா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கடைகள் தோறும் வீரர்கள் வழங்கினர். தொடர்ந்து முக்கிய வீதிகளில் இருசக்கர பேரணி சென்றது.இதில் தீயணைப்பு வீரர்கள் பாலகிருஷ்ணன், சாமி, மாடசாமி, ராஜேந்திரன், திலகர், உலகநாதன், வெள்ளபாண்டியன், உதயபிரகாஷ், மற்றும் தீயணைப்பு தன்னார்வலர்கள் தாமோதரன், அபிலாஷ், சசிதரன், பிரேம், செல்வபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி..
எழுதியவர்: mohan October 22, 2020, 11:09 am




You must be logged in to post a comment.