18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் சிசிடிவி கேமரா அமைக்க ரூ.10 லட்சம் நிதிக்கான காசோலை வழங்கல்..

நெல்லையில் சிசிடிவி கேமரா அமைக்க ரூ.10 லட்சம் நிதிக்கான காசோலை வழங்கல்..

எழுதியவர்: mohan October 22, 2020, 11:03 am

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்க ரூ.10 லட்சம் நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் அருகில் அம்பாசமுத்திரம் சட்ட மன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்க ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.அம்பை சட்டமன்ற பகுதிகளான சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பாசமுத்திரம், வீகேபுரம், ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை சீர் செய்யும், நோக்கத்திலும் அம்பாசமுத்திரம் சட்ட மன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலை வழங்கி சிசிடிவி கேமரா அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.விரைவில் மேற்கண்ட பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி ASP பிரதீப், அம்பை DSP பிரான்ஸிஸ்மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!