17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் பூத்து கமிட்டி துவக்கம்

நிலக்கோட்டை ஒன்றியத்தில் பூத்து கமிட்டி துவக்கம்

எழுதியவர்: mohan October 22, 2020, 10:21 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் அ. தி. மு. க கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக இளைஞர் பாசறை அமைப்பும் மற்றும் பூத்து கமிட்டி காமலாபுரம், சக்கையநாயக்கனூர் , மெட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் 10 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கு இடையே துவக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் பேசியதாவது: தற்போது இளைஞர் பாசறை மற்றும் பூத்து கமிட்டி அமைக்கும் நிகழ்ச்சிக்கு திரளாய் அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது அதிமுக நிறுவனர் எம். ஜி, ஆர் தொடங்கிய காலத்தில் எந்த ஆர்வத்தில் மக்கள் சேர்ந்தார்களா அதைவிட ஆரவாரமாக இந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் இருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த உற்சாகத்தையும் அந்தத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்பது எழுச்சியை ஊட்டுகிறது என பேசினார். இந்நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் ஜேசுராஜ், செந்தில்குமார், தவமணி, முன்னாள் எத்திலோடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!