திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் எஸ். எஸ். காலனியைச் சேர்ந்த ராமசாமி மகன் சௌமி நாராயணன் வயது 41, இவர் கொடைக்கானலில் டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரும் இவரது அக்கா சுபா வயது 47, மனைவி திவ்யா வயது 35, சுபாவின் மகன் ஸ்ரீராம் வயது 15. ஆகிய 4 பேர்களும் கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் நிலக்கோட்டை அடுத்துள்ள மணியகாரன்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வத்தலக்குண்டுவிலிருந்து பள்ளபட்டி அருகே உள்ள சிப்காட் பகுதிக்கு செல்லக்கூடிய வந்த ஒரு லாரி வந்தது . அப்போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ஒரு பைக்கில் சென்ற வாலிபர் அதிவேகமாக காரை கடந்துள்ளார். இதனால் லாரியில் ஓட்டி வந்த டிரைவர் நிலைகுலைந்து நேருக்கு நேராக கார் மீது மோதினார். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சௌமி நாராயணன், சுபா, ஸ்ரீராம் ஆகிய 3 பேர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். காரில் இருந்த திவ்யாவை நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு போலீசார் மீட்டு உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து திவ்யா மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய சௌமி நாராயணன் லாரி மோதியதில் டிரைவர் சீட்டில் அமர்ந்து வாக்கில் நன்கு சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அங்கு கிடைத்த ஆயுதங்களை வைத்து நைசாக சௌமிய நாராயணனை உடலை பாதுகாப்பாக எடுத்தார். இந்தச் சம்பவத்தை இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டதாக கூறினார்கள். அந்த பைக்கில் சென்ற வாலிபர் யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கணேசன், மற்றும் போலீசார் விரைந்து விபத்தில் சிக்கி இறந்து போன உடலை எடுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
#1 நிலக்கோட்டை அருகே விபத்தில் இறந்து கிடக்கும் நபர்களை படத்தில் காணலாம்.
#2 விபத்தில் சிக்கிய லாரி மற்றும் காரை படத்தில் காணலாம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டை அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பரிதாபமாக சாவு
எழுதியவர்: mohan October 21, 2020, 10:03 am




You must be logged in to post a comment.