17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசும்பொன் தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை வழிமுறைகள்… இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல்..

பசும்பொன் தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை வழிமுறைகள்… இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல்..

எழுதியவர்: ஆசிரியர் October 20, 2020, 11:16 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113 வது பிறந்த நாள் விழா மற்றும் 58 வது குரு பூஜை நிகழ்ச்சிகளின் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவுரைகளின்படி 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, இந்நிலையில் பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மரியாதை செலுத்த வருகை தரும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் (5நபர்களுக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் 26.10.2020 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் . மரியாதை செலுத்த வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். மரியாதை செலுத்த வருபவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவற்காக அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!