17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வல்லரசுவின் 20ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர் மரியாதை.

உசிலம்பட்டி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வல்லரசுவின் 20ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர் மரியாதை.

எழுதியவர்: mohan October 20, 2020, 6:29 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வ்hட் கட்சித் தலைவர்களில் ஒருவரும் – மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.என்.வல்லரசுவின் 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் பலர் மலர்தூவி மரியாதை செலுத்திய நிலையில் அதிமுக சார்பில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து உசிலம்பட்டி பேருந்துநிலையம் அருகில் உள்ள தேவர் சிலை வளாகத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையாதேவருக்கு வெண்கல சிலை அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்தார். மேலும் சிலை அமையவுள்ள வரைபடத்தையும் பார்வையிட்டார்.இதில் உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!