17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » PFI உரிமை முழக்க மாநாடு..பிற்படுத்தப்பட்டோர்களின் உரிமைகள் மீட்கப்படுமா??

PFI உரிமை முழக்க மாநாடு..பிற்படுத்தப்பட்டோர்களின் உரிமைகள் மீட்கப்படுமா??

எழுதியவர்: ஆசிரியர் October 7, 2017, 12:40 am

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உரிமை முழக்க மாநாடு நாளை (07-10-2017) மதுரை விவசாய கல்லூரி எதிரில் ஒத்தக்கடை பகுதியில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு பணியினை கடந்த பல மாதங்களாக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த மாநாடு சம்பந்தமாக கீழக்கரையில் பல பகுதிகளில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கீழக்கரையில் இருந்து அவ்வமைப்பு சார்பாக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக நாளை (07-10-2017) காலை 10.30 மணியளவில் கீழக்கரை ஜும்ஆ பள்ளி பின்புறம் இருந்து சென்று வருவதற்கு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, அவ்வாறு உரிமைகள் மீட்டெடுக்க முக்கிய கருவியாக இருந்தால் சமுதாய மக்களுக்கு சந்தோசமே..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!