17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்றம்பள்ளியில் ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பலி

நாட்றம்பள்ளியில் ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பலி

எழுதியவர்: mohan October 20, 2020, 5:47 pm

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அக்ராகரம் வேடி வட்டUகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் (40) தனது நண்பர்களான புதுப்பேட்டையை சேர்ந்த 5 பேருடன் அக்ராகாரம் மலைப்பகுதியில் உள்ள குளத்தில் நீந்திய போது சேற்றில் சிக்கி ஆறுமுகம் மூழ்கி இறந்து உள்ளார். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலை மீட்டு கொடுத்தனர். நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் சென்ற ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!