திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் கடந்த 5 வருடங்களாக நான்கு மகளிர் சுய உதவி குழுக்கள் அமைப்பு செயல்பட்டு வருகின்றன அதில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து உதவி குழுவில் உள்ள பெண்கள் வாங்கி வருகின்றனர்.
இந்தக் குழுவின் முதலாவது குழு உறுப்பினராக சமுதாய நல மேம்பாட்டு சங்கம் தலைவர் பெரிய காளி என்ற காளியம்மாள் என்பவரிடம் மாதம் மாதம் குழுவிலுள்ள 53 நபர்களுக்கும் ஒவ்வொரு நபர் வீதம் ரூபாய் 150 சேமிப்பாக செலுத்தி வந்தோம். இதன் மொத்த தொகையாக 7,800 வேதம் 5 வருடங்களில் ரூபாய் 4 லட்சத்து 68 ஆயிரம் சேமிப்பு கணக்கில் குழுவின் பெயரில் சேமித்து உள்ளோம். இந்தப் பணத்தை தலைவர் என்ற முறையில் பெரிய காளி என்பவர் கையாடல் செய்துள்ளார். அவரை பிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்
எழுதியவர்: mohan October 20, 2020, 9:46 am




You must be logged in to post a comment.