18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நிறைவு விழா:அரசு அதிகாரிகள் பங்கேற்பு

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நிறைவு விழா:அரசு அதிகாரிகள் பங்கேற்பு

எழுதியவர்: mohan October 19, 2020, 10:06 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நிறைவு விழா ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன், சமூக சேவகர் அமாவாசை முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கிருத்திகா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பத்து நாள் பயிற்சிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் ஊராட்சி மன்ற தலைவர் விஜய், மேல்பெண்ணாத்தூர் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பேசுகையில், இந்தியன் வங்கி செய்ய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் மூலம் பல்வேறு பயிற்சி கிராம மக்களுக்கு இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு கிராம வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். என்று பேசினார் இந்தியன் வங்கி ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் கோவிந்தராஜன் , பயிற்றுனர் செந்தில்குமார், முக்கிய பிரமுகர் செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!