17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா!ஏழை எளியோர்களுக்கு மாவட்ட செயலாளர் நலத்திட்ட உதவி

அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா!ஏழை எளியோர்களுக்கு மாவட்ட செயலாளர் நலத்திட்ட உதவி

எழுதியவர்: mohan October 19, 2020, 9:57 am

தி.மலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார் பின்னர் நல திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல்தி.மலை காந்திசிலை அருகில் விழா நடைபெற்ற விழாவுக்கு நகர கழக செயலாளர் ஜெ.செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழைஎளியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், அம்மா பேரவை இணை செயலாளர்கள் கராத்தே என்.பாண்டு, மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கே.உஷாநாதன், மாவட்ட உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், கலசபாக்கம், துரிஞ்சாபுரம், போளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழாவினை அதிமுகவினர் கொண்டாடினர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!