18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரைக்கு வருகை புரிந்த SDPI மாநில தலைவர்… உற்சாக வரவேற்புடன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

கீழக்கரைக்கு வருகை புரிந்த SDPI மாநில தலைவர்… உற்சாக வரவேற்புடன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

எழுதியவர்: ஆசிரியர் October 17, 2020, 11:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் 16-10-2020 அன்று வருகை புரிந்தார்.  அவர் வருகையை தொடர்ந்து நகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

அதை தொடர்ந்து  உசைனியா திருமண மஹாலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாநில தலைவரின் தலைமை உரையுடன், மாநில நிர்வாகிகளும் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் உறுப்பினராக சேர்க்கும் முகாம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில், இராமநாதபுரம் தொகுதி துணைத் தலைவர் நூருல் ஜமான், மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ் மற்றும் இராமநாதபுரம் தொகுதி தலைவர் அப்துல் ஜமீல் ஆகியோர் முன்னிலையில், இணை செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்புரை நிகழ்த்த நகர் செயற்குழு உறுப்பினர் அகமது நதீர் தொகுப்புரை வழங்க எஸ்.டி.பி.ஐ மாநில பேச்சாளர் மெளலான மெளலவி.ஜஹாங்கீர் அருஸி சிறப்புரையாற்ற எஸ்.டி.பி.ஐ தமிழ்மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நகர் செயலாளர் பகுரூதீன் நன்றி உரையாற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!