18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் அதிமுக கட்சி 49வது ஆண்டு தொடக்க விழா

நிலக்கோட்டையில் அதிமுக கட்சி 49வது ஆண்டு தொடக்க விழா

எழுதியவர்: mohan October 17, 2020, 4:37 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள மினி பஸ் ஸ்டாண்ட் அதிமுக கொடி கம்பத்தில் 49 வது கட்சி தொடக்க விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாகப்பன் தலைமையில் நிலக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து மினி பஸ் ஸ்டாண்ட் திமுகவினர் சுமார் 200 பேர் ஊர்வலமாக திரண்டு வந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நிலக்கோட்டை தபால் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மேடையில் அதிமுக கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் . தேன்மொழிசேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரக்செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர்,நகர பொறுப்பாளர் அண்ணாமலை, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மாவட்ட கவுன்சிலர் ராஜா , தொழில்நுட்ப ஒன்றிய பொறுப்பாளர் குமரேசன், கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், மாலைய கவுண்டன்பட்டி அதிமுக ஊராட்சி பொறுப்பாளர் காட்டுராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!