17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “தமிழ் இனி மெல்ல சாகும்..?”..இராமநாதபுரம் – கீழக்கரை தோட்டகலை பூங்காவில் தமிழ் இல்லாத பதாகை…

“தமிழ் இனி மெல்ல சாகும்..?”..இராமநாதபுரம் – கீழக்கரை தோட்டகலை பூங்காவில் தமிழ் இல்லாத பதாகை…

எழுதியவர்: ஆசிரியர் October 17, 2020, 1:12 pm

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் திருப்புல்லாணி அருகே மாவட்ட தோட்டக்கலை பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. இதில் இதன் நுழைவாயில் பதாகை முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கவனக்குறைவா? அல்லது மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே செய்கிறதா? அதில் என்ன வாசகம் எழுதியுள்ளது என்று தெரியாமல் சாமானியர்கள் கடந்து செல்கிறார்கள்.

குறைந்தபட்சம் ஆங்கிலத்தை சிறிதாக போட்டு ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் போட்டிருக்கலாம். ஆனால் தமிழே இல்லாமல் முழுமைக்கும் ஆங்கிலத்தில் போடப்பட்டுள்ளது திட்டமிட்ட தமிழ் புறக்கணிப்பாகும். இதை வீரகுல தமிழர் படை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் விரைவாக பூங்காவில் உள்ள பெயரை தமிழில் மாற்றும்படி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம் என கீழை பிரபாகரன்,   ஒருங்கிணைப்பாளர்  வீரகுல தமிழர் படை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!