மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த இலவச
மருத்துவ முகாமை சீமானுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி தொடங்கி வைத்தார். இதில் தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை குழுவினர் இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ஈசிஜி, எக்ஸ்ரே,ரத்த பரிசோதனை,சர்க்கரை,ஆஸ்துமா உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்,காது,மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மற்றும் கர்ப்பிணிகளுக்கான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசிலா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சீமானுத்து ஊராட்சிட்குட்பட்ட மெய்யனம்பட்டி, மாமரத்துப்பட்டி, நல்லிவீரன்பட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
சீமானுத்து கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan October 17, 2020, 1:43 pm




You must be logged in to post a comment.